விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை: ; 2 கோரிக்கைகளை ஏற்ற மத்திய அரசு!

Webdunia
வியாழன், 31 டிசம்பர் 2020 (07:34 IST)
மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் அரியானா உள்பட வட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தலைநகர் டெல்லியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக போராடி வருகின்றனர் 
 
உலகின் கவனத்தை ஈர்த்த இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு ஏற்கனவே பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் தற்போது மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது 
 
மத்திய அரசு அதிகாரிகள் மற்றும் விவசாய சங்கத்தின் பிரதிநிதிகள் இடையே நடைபெற்று வரும் இந்த பேச்சுவார்த்தையில் விவசாயிகளின் இரண்டு கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்று உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
டெல்லியில் போராடிவரும் விவசாயிகள் உடனான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகளுக்கு கிடைக்கும் இலவச மின்சாரத்தை ரத்து செய்ய வழிவகுக்கும் மின்சார மசோதாவை சட்டமாக்க ரத்து செய்வதாகவும் வைக்கோல் உள்ளிட்ட பயிர்களை அழிக்கும் விவசாயிகளுக்கு அபராதம் விதிக்க கூடாது என்ற விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்று உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
விவசாயிகளின் இரண்டு கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்று உள்ளதால் விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வர வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்