மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநில விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளும் தொடர்ந்து வேளாண் சட்டங்களை விமர்சித்து வருகின்றன. முக்கியமாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி மத்திய அரசு மீது காட்டமான விமர்சனங்களை வைத்து வருகிறார்.