அம்பானி நிறுவன தயாரிப்புகளை புறக்கணியுங்கள்: விவசாயிகள் வேண்டுகோள்

Webdunia
வியாழன், 10 டிசம்பர் 2020 (10:39 IST)
மத்திய அரசின் வேளாண்மை சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 10 நாட்களுக்கும் மேலாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு நாளுக்கு நாள் ஆதரவு குவிந்து வரும் நிலையில் தற்போது விவசாயிகள் தங்களது அடுத்த கட்ட போராட்டத்தை துவக்கியுள்ளனர்
 
ஏற்கனவே மத்திய அரசை கடுமையாக எதிர்த்து வரும் விவசாயிகள் தற்போது மத்திய அரசுக்கு நெருக்கமாக இருக்கும் ரிலையன்ஸ் நிறுவனத்தை நோக்கி தங்கள் பார்வையை செலுத்தி உள்ளனர் 
 
அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவன தயாரிப்பை புறக்கணியுங்கள் என்று விவசாயிகள் வேண்டுகோள் விடுத்து இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ சிம் கார்டுகள், இணையதள வசதி, ரிலையன்ஸ் பெட்ரோல் பங்குகள் ஆகியவற்றை புறக்கணிப்போம் என்று விவசாயிகள் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது 
 
அதுமட்டுமின்றி சுங்கச்சாவடிகளில் பொதுமக்கள் கட்டணம் செலுத்தாமல் செல்லும் வகையில் அரணாக நிற்போம் என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மத்திய அரசுக்கு நெருக்கமாக இருக்கும் ரிலையன்ஸ் நிறுவனத்தை தவிர்ப்பது மட்டுமின்றி சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கவும் விடமாட்டோம் என விவசாயிகள் தங்களது அடுத்த கட்ட போராட்ட அறிவிப்பு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்