மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியான உள்ளிட்ட மாநில விவசாயிகள் தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்றுடன் 14 நாட்களாக தொடர்ந்து போராட்டம் நடத்தப்பட்டு வரும் நிலையில் நேற்று விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் பந்த் நடைபெற்றது.
இந்நிலையில் அரசியல் சாணக்கியர் என போற்றப்படும் பாஜகவின் உள்துறை அமைச்சர் அமித்ஷா விவசாயிகள் சங்க பிரதிநிதிகளை சந்தித்து பேசியுள்ளார். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று சட்டத்தில் தேவையான திருத்தங்களை மேற்கொள்வதாக அவர் கூறியதாக தெரிகிறது. ஆனால் சட்ட திருத்தம் தேவையில்லை சட்டத்தை முழுமையாக திரும்ப பெற வேண்டும் என விவசாயிகளின் பிரதிநிதிகள் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாமல் போன நிலையில் இன்று நடைபெற இருந்த 6வது கட்ட பேச்சுவார்த்தையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.