கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் கிட்டத்தட்ட தயார் நிலைக்கு வந்துள்ள நிலையில் தமிழகத்தில் தடுப்பூசி போடுவதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
உலக நாடுகளை கடந்த ஒரு ஆண்டு காலமாக அச்சுறுத்தி வந்த கொரோனாவிலிருந்து விடுபட கிட்டத்தட்ட தடுப்பூசிகள் கிடைத்துவிட்டன. அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் கண்டுபிடித்துள்ள தடுப்பூசிகளில் குணப்படுத்தும் விகிதம் மாற்றத்துக்கு உள்ளானவையாக இருப்பதால் எந்தெந்த தடுப்பூசிகளை வாங்குவது என இந்திய அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் தடுப்பூசிகளை இருப்பு வைக்கவும், விநியோகிக்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. தமிழகத்தில் மொத்தம் 2,800 இடங்களில் தடுப்பூசிகளை இருப்பு வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 51 மையங்களில் பதப்படுத்தும் வசதி உள்ளது. இதன் மூலம் மொத்தம் 2 கோடி தடுப்பூசி வரை இருப்பு வைக்க முடியும். எனினும் தமிழகத்தில் முதல்கட்டமாக 5 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.