இந்த நிலையில், கொரொனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களை பாதுகாக்க மத்திய அரசு தற்போது அவசர சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
அதன்படி , மத்திய அமைசர்களை தாக்கினால் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.
மேலும், ஜவடேகர் கூறியுள்ளதாவது, மருத்துவர்கள் மீது தாக்கல் நடத்தப்படுவதை அரசு பொறுத்துக்கொள்ளாது. இந்தக் குற்றத்தில் கைது செய்யப்படுகிறவர்களுக்கு ஜாமீன் கிடையாது.இதுகுறித்து 30 நாட்களில் விசாரணை நடத்தி முடிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இந்தச் சட்டம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்குப் பின் அமலுக்கு வரும் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி கூறியுள்ளதாவது :
இந்தியாவில், மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பில் சமரசத்திற்கு இடமில்லை; இன்று மத்திய அரசு இயற்றியுள்ள அவசரச் சட்டம் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.