மோடியின் ஏப்ரல் 14 உரையை எத்தனைக் கோடி பார்த்துள்ளனர் தெரியுமா?

சனி, 18 ஏப்ரல் 2020 (08:55 IST)
ஏப்ரல் 14 ஆம் தேதி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட மோடியின் வீடியோவை 20 கோடியே 30 லட்சம் பார்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா காரணமாக முதல் முறையாக மார்ச் 25 ஆம் தேதி ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்து பிரதமர் மோடி தொலைக்காட்சிகளில் பேசினார். அதன் பின்னரும் கொரோனா தாக்கம் குறையாததால் மீண்டும் ஏப்ரல் 14 ஆம் தேதி அவர் தொலைக்காட்சிகளில் உரையாற்றினார்.

கிட்டத்தட்ட 25 நிமிடம் ஒளிபரப்பட்ட உரையை கிட்டத்தட்ட 20 கோடியே 30 லட்சம் பேர் பார்த்துள்ளனர். இந்த தகவலை ஒளிபரப்பு நேயர்கள் ஆராய்ச்சி கவுன்சில் (பிஏஆர்சி) தலைமை நிர்வாகி சுனில் லல்லா தெரிவித்துள்ளார். மேலும் கொரோனாவுக்குப் பின் தொலைக்காட்சி பார்வையாளர்களின் எண்ணிக்கை 38 சதவீதம் அதிகமாகியுள்ளதாகவும், ஸ்மார்ட் போன் பயன்பாடு 40 சதவீதம் அதிகமாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்