மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே அணிதான் உண்மையான சட்டபூர்வமான சிவசேனா என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதை அடுத்து முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
சிவசேனா கட்சி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இரண்டாக பிரிந்தது என்பதும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா தற்போது ஆட்சியில் உள்ளது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் ஏக் நாத் தலைமையிலான பிரிவுதான் சட்டபூர்வமான சிவசேனா என்று தேர்தல் ஆணையம் சற்றுமுன் அறிவித்துள்ளது. மேலும் தற்போதைய உத்தவ் தாக்கரேவின் சிவசேனா ஜனநாயக முறையில் இல்லை என்றும் தேர்தல் ஆணையம் கருத்து தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணையம் ஏக்நாத் தலைமையிலான சிவசேனா தான் உண்மையான சிவசேனா என்று கூறியதை அடுத்து அக்கட்சியின் வில் அம்பு சிம்பு சின்னம் அந்த பிரிவுக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.