அமெரிக்க அதிபர் தேர்தல்: இரண்டு இந்திய வம்சாவளியினர் போட்டியா?

வியாழன், 16 பிப்ரவரி 2023 (11:57 IST)
அடுத்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதில் இரண்டு இந்திய வம்சாவளியினர் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
அவரை எதிர்த்து குடியரசு கட்சியை சார்பில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுவார் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் குடியரசு கட்சி சார்பில் மேலும் இரண்டு இந்திய வம்சாவளியினார் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர் 
 
விவேக் ராமசாமி என்ற இந்திய வம்சாவளி போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் இன்னொரு இந்திய வம்சாவளியான நிக்கி ஹாலே என்பவரும் போட்டியிட இருப்பதாக தெரிகிறது.  ஜோ வைடனை எதிர்த்து குடியரசு கட்சியின் சார்பில் போட்டியிடுபவர் யார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்