ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: திமுக, அதிமுக தேர்தல் பணிமனைகளுக்கு சீல்

வியாழன், 16 பிப்ரவரி 2023 (12:12 IST)
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அனுமதி பெறாமல் பணிமனைகள் அமைத்த திமுக மற்றும் அதிமுகவின் பணிமனைகளுக்கு அதிரடியாக சீல் வைக்கப்பட்டுள்ளது. 
 
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதிமுக திமுக உள்ளிட்ட கட்சிகள் விறுவிறுப்பாக தேர்தல் பிரச்சாரத்தில் உள்ளன. 
இந்த நிலையில் அனுமதி இன்றி திமுக அதிமுக பணிமனைகள் செயல்படுவதாக எழுந்த புகாரை அடுத்து அதிரடியாக தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். 
 
திமுகவின் 10 பணிமனைகள் மற்றும் அதிமுகவின் 4 பணிமனைகள் அனுமதி இல்லாமல் இயங்குவதை கண்டுபிடித்த தேர்தல் அதிகாரிகள் அந்த பணிமனைகளுக்கு சீல் வைத்தனர். இதனால் அதிமுக திமுகவினர் தேர்தல் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்