போதைப்பொருள் வழக்கு ...பாஜக பெண் நிர்வாகி கைது...சதி நடப்பதாக புகார் !

Webdunia
சனி, 20 பிப்ரவரி 2021 (17:04 IST)
பாஜக நிர்வாகி பமேலா கொஸ்வாமி போதைப்பொருள் கடத்தியதாகக் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவர் தனக்கு எதிரான சதி நடப்பதாகக் கூறியுள்ளார்.

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஒரு பகுதியில் அம்மாநில பாஜக மாநில இளைஞரணி செயலாளர் பமேலா கொஸ்வாமி என்பவர் போதைப்பொருள் கடத்திச் சென்றுள்ளார்.

மேலும், இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் பாஜக நிர்வாகி பமேலா கொஸ்வாமியிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

பமேலா கொஸ்வாமியுடன் தொடர்புடைய மேலும் சிலர் இவ்வழக்கில் சிக்கக்கூடும் எனத் தகவல் வெளியானது.

இந்நிலையில், மேற்கு வங்கத்தில் கொகைன் என்ற போதைப்பொருள் வைத்திருந்ததாக போலீஸாரால் கைது செய்யப்பட்ட பாஜக இளைஞரணி தலைவர் பமீலா கோஸ்வாமி, இன்று நீதிமன்ற வளாகத்தில் கூறியுள்ளதாவது: பாஜக தலைவர் கைலாஷ் விஜய்வர்கியாவின் உதவியாளார் ராகேஷ் சிங் எனக்கு எதிராகச் சதி செய்துவருகிறார். அவரைக் கைது செய்ய வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்