உலகில் மிகப்பெரிய உயிரியல் பூங்கா அமைக்க முகேஷ் அம்பானி திட்டம் !

Webdunia
சனி, 20 பிப்ரவரி 2021 (17:01 IST)
உலகில் மிகப்பெரிய டாப் டென் பணக்காரர்களில் ஒருவர் ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி. இந்தக் கொரோனா காலத்தில் அவரது சொத்து மதிப்பு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், அம்பானியின் சொந்த மாநிலமான குஜராத்தில்  உலகில் மிகப்பெரிய உயிரியல் பூங்காவை அமைக்க ரிலையன்ஸ் குழுமம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

 மேலும், நாட்டில் எத்தனையோ உயிரியல் பூங்காக்கள் இருந்தாலும் முகேஷ் அம்பானி அமைக்கவுள்ள இந்த உயிரியல் பூங்காவில்தான் கொமோடோ டிராகன்கள், சிறுத்தைகள், பறவைகள், ஆகியவற்றைக் காட்சிக்கு வைத்து வளர்க்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்