நாளை நாடு முழுவதும் சில அமைப்பினர் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதால், பாதுகாப்பை பலப்படுத்துமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
தலித் வன்கொடுமை சட்டம் தொடர்பாக சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவுக்கு, கடந்த 2 ஆம் தேதி தலித் அமைப்புகள் நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தின் போது வன்முறை வெடித்து பத்துக்கும் அதிகமான உயிர்கள் பலியாகின. இந்நிலையில், கல்வி, வேலைவாய்ப்பில் தங்கள் இனத்தவர்களுக்கு உரிய முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாளை நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்த முறை எந்த அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க பாதுகாப்பை பலப்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் இன்று உத்தரவிட்டுள்ளது. உயிரிழப்புகள் மற்றும் பொது சொத்துகள் சேதம் அடையாமல் பாதுகாக்கும் படியும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.