காவிரிப் போராட்டத்தில் சூரி ஏன் கலந்து கொள்ளவில்லை தெரியுமா?

திங்கள், 9 ஏப்ரல் 2018 (12:32 IST)
காவிரிப் போராட்டத்தில் ஏன் கலந்து கொள்ளவில்லை என சூரி விளக்கம் அளித்துள்ளார். 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் சினிமாத்துறையினர் நேற்று போராட்டம் நடத்தினர். வள்ளுவர் கோட்டம் அருகில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் ரஜினி, கமல், சூர்யா, இளையராஜா, வைரமுத்து, சிவகார்த்திகேயன்,  விஜய், தனுஷ், கார்த்தி, விஷால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 
காமெடி நடிகர் சூரி, தான் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள முடியாததற்கான காரணத்தை ட்விட்டரில் தெரிவித்துள்ளார். “பெரியம்மாவின் திடீர் மரணத்தால், காவிரிக்காக நடிகர் சங்கம் நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்க முடியவில்லை. ஆனாலும், பச்சைத் தண்ணீர் கூடப் பருகாமல்,  நானும் உண்ணாவிரதம் மேற்கொள்கிறேன். பெரியம்மாவுக்கு நிகரானவர்கள்தானே சோறாக்கிப் போட்ட அத்தனை அம்மாக்களும்!” என ட்விட்டரில்  தெரிவித்துள்ளார் சூரி.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்