குஜராத்திகள் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜராக துணை முதல்வருக்கு உத்தரவு..!

Webdunia
வெள்ளி, 22 செப்டம்பர் 2023 (07:54 IST)
குஜராத்திகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
 
குஜராத்திகள் குறித்து  பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் சமீபத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியபோது குஜராத்திகள் மூர்க்கத்தனமானவர்கள் என்று பேசினார். இதனை அடுத்து அவர் மீது நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. 
 
இந்த அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக அகமதாபாத் மெட்ரோபாலிட்டன் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. செப்டம்பர் 22ஆம் தேதி அதாவது இன்று அவர் ஆஜராக வேண்டும் என்று அகமதாபாத் நீதிமன்றம் சம்மன் அனுப்பியதை அடுத்து இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜராக இருக்கிறார். 
 
இதனை அடுத்து அகமதாபாத் மெட்ரோபாலிட்டன் நீதிமன்றத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்