அதன்படி, காங்கிரஸ், திமுக, திரிணாமுல், ஜனதா தளம், சமாஜ்வாடி உள்ளிட்ட இந்தியா முழுவதும் உள்ள 16 கட்சிகள் இக்கூட்டணியில் இணைந்துள்ளன.
இந்த நிலையில், பாட்னா, பெங்களூரில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதைத் தொடர்ந்து, சமீபத்தில் மும்பையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதுபற்றி அவர் கூறியதாவது:
''நாடு முழுவதும் முன்கூட்டியே தேர்தல் நடத்த வேண்டும் என பாஜக எதிர்பார்க்கிறது. அதற்காக நாங்களும் காத்திருக்கிறோம். எவ்வளவு சீக்கிரம் தேர்தல் நடத்துகிறீர்களோ அத்தனை நல்லது; நாடாளுமன்றத் தேர்தல் முன்கூட்டியே எதிர்கொள்வதில் எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை ''என்று தெரிவித்துள்ளார்.