பாகிஸ்தான் எல்லை அருகே தமிழக இளைஞர் கைது.. சந்தேகத்துக்கு இடமாக நடமாட்டம் என தகவல்..!

புதன், 30 ஆகஸ்ட் 2023 (15:26 IST)
பாகிஸ்தான் எல்லையில் தமிழக இளைஞர் ஒருவர் சந்தேகத்திற்கு இடமாக நடமாடியதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது. 
 
இந்தியா பாகிஸ்தான் எல்லைகளில் ஒன்றான குஜராத் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லை பகுதியான கட்ச் அருகே தமிழக  இளைஞர் ஒருவர் சந்தேகத்திற்கு இடமாக நடமாடிக் கொண்டிருந்ததாகவும் அவரிடம் விசாரணை செய்த போது முன்னுக்குப் பின் முரணாக சில விஷயங்களை கூறியதாகவும் தெரிகிறது.
 
முதல் கட்ட விசாரணையில் தமிழகத்தின் தேனி பகுதியைச் சேர்ந்த தினேஷ் லட்சுமணன் தேவர் என்பவர் தான் கைது செய்யப்பட்டவர் என்பது கூறப்படுகிறது. குஜராத்தில் உள்ள பாகிஸ்தான் எல்லை பகுதியான கட்ச் என்ற சர்வதேச எல்லையில் சந்தேகத்துக்கிடமாக நடமாடியதால் அந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக குஜராத் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்