ஜாபர் சாதிக் இடம் வாக்குமூலம் வாங்கும் போது வழக்கறிஞர் அனுமதிக்கப்படுவதாக நீதிமன்றம் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரூபாய் 2000 கோடி போதை பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் என்பவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார் என்பதும் அவருடன் சேர்த்து மொத்தம் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஜாபர் சாதிக்கை காவலில் எடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி கொடுத்த நிலையில் ஜாபர் சாதிக் இடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் வாக்குமூலம் பெறும்போது அவரது வழக்கறிஞர் உடன் இருக்க ஜாபர் சாதிக் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது ஜாபர் சாதிக்கிடம் வாக்குமூலம் பெறும்போது அவரது வழக்கறிஞர் உடன் இருக்க நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. டெல்லி சிறப்பு நீதிமன்றத்தின் இந்த உத்தரவில் ஜாபர் சாதிக்கிடம் வாக்குமூலம் பெரும்போது வழக்கறிஞர் 15 நிமிடம் உடன் இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.