கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு! பயன்படுத்தியவர்களின் நிலை என்ன?

Mahendran

புதன், 8 மே 2024 (09:02 IST)
கோவிஷீல்டு தடுப்பூசி திரும்பப் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை கோடிக்கணக்கானோர் செலுத்தியவர்களின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.
 
கொரோனா வைரஸ் தடுப்பூசி கோவிஷீல்டு குறித்த வழக்கு சமீபத்தில் லண்டன் உயர் நீதிமன்றத்தில் நடந்தநிலையில் இந்த வழக்கின் போது கோவிஷீல்டு தடுப்பூசி மிகவும் அரிதான பக்க விளைவு ஏற்படுத்தும் என்றும் ரத்தம் உறைய வாய்ப்பு இருக்கலாம் என்றும் ஒப்புக்கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .
 
இந்த தடுப்பூசி ஏற்கனவே 175 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த நிறுவனம் தற்போது தாக்கல் செய்த அறிக்கையில் பக்க விளைவு ஏற்படும் என்று கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்த நிலையில் இது குறித்து குழு அமைத்து விசாரணை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் கோவிஷீல்டு தடுப்பு ஊசியை திரும்ப பெறுவதாக இந்த தடுப்பூசியை தயாரித்த அஸ்ட்ரசெனகா என்ற நிறுவனம் அறிவித்துள்ளது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்