இந்நிலையில் சனிக்கிழமை இரவு சவுக்கு சங்கர் 10"க்கும் மேற்பட்ட காவலர்கள் பிளாஸ்டிக் பைப்பில் துணி சுற்றி பலமாக தாக்கி உள்ளனர் எனவும் இதில் சவுக்கு சங்கருக்கு உடல் முழுவதும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் இன்று சவுக்கு சங்கரை வழக்கறிஞர் சிறையில் நேரில் சந்தித்ததாகவும் மேலும் சவுக்கு சங்கர் உயிருக்கு கோவை மத்திய சிறையில் ஆபத்து இருப்பதாக தெரிவித்த வழக்கறிஞர் குறிப்பாக ஏற்கனவே கடலூரில் சிறை கண்காணிப்பாளராக இருந்த செந்தில் குமார் தற்போது கோவை மத்திய சிறை கண்காணிப்பாளராக இருப்பதால் சவுக்கு சங்கரை பழி வாங்கும் நோக்கில் கோவையில் வழக்கு பதிவு செய்து சித்திரவதை செய்து வருவதாகவும் தமிழகம் முழுவதும் காவல்துறையினர் அராஜகம் செய்து வருவதாகவும் தொடர்ச்சியாக தமிழகத்தில் லாக்கப் மரணம் நடந்து வருவதாகவும் வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டினர்.