லட்சத்தை தொட்ட பாதிப்பு, என்ன செய்ய போகிறது மராட்டிய அரசு!

Webdunia
சனி, 13 ஜூன் 2020 (08:47 IST)
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மகாராஷ்டிராவில் பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியுள்ளது. 
 
ஆம், நேற்று ஒரே நாளில் அம்மாநிலத்தில் 3,493 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் அங்கு மொத்தமாக 1,01,141 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 3,717 பேர் பலியாகியுள்ளனர். 
 
இந்த இக்கட்டான சூழ்நிலையில் மகாராஷ்டிராவில் முழு ஊரடங்கு அமலாக உள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியது. ஆனால் இந்த செய்தியை இதனை அம்மாநில முதல்வர் மறுத்துள்ளார். 
 
ஊரடங்கு தளர்வு என்பது பொருளாதாரத்தை சீர்படுத்த மட்டுமே, மக்கள் கூட்டம் கூடுவதற்கோ கொண்டாடவோ அல்ல என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்