நாங்க ஒன்னும் செய்ய மாட்டோம்..அதுவா கவிழ்ந்திடும்: காங்கிரஸ் - மஜதவை வாரிய எடியூரப்பா

Webdunia
திங்கள், 17 செப்டம்பர் 2018 (09:38 IST)
கர்நாடகத்தில் நடைபெற்று வரும் கூட்டணி ஆட்சியை நாங்கள் கவிழ்க்க முயற்சி செய்யவில்லை, அது தானாகவே கவிழ்ந்து விடும் என்று எடியூரப்பா கூறியுள்ளார்.
கர்நாடகாவில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆட்சியமைக்கும் அளவிற்கு பெரும்பான்மை இல்லாத காரணத்தால், காங்கிரஸ் - மஜக கூட்டணி அமைத்து, குமராசாமி முதலமைச்சாராக பதவியேற்று ஆட்சி செய்து வருகிறார். 
 
கட்சியில் முக்கியப் பதவிகள் கொடுக்காததால் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பலர் அதிருப்தியில் இருப்பதாகவும் அவர்கள் அனைவரும் பாஜகவில் சேர உள்ளதாக செய்திகள் வெளியாகின.
 
இந்நிலையில் துமகூரு சித்தகங்கா மடாதிபதி சிவக்குமாரசுவாமியை நேற்று கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா நேரில் சந்தித்தார். பின் செய்தியாளரளிடம் பேசிய அவர் கர்நாடகாவில் நடைபெற்று வரும் ஆட்சியால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என தெரிவித்தார். 
மேலும் காங்கிரஸ் - மஜத கூட்டணியை பாஜக கவிழ்க்க திட்டமிடுவதாக குமாரசாமி கூறியிருப்பது முற்றிலும் ஆதாரமற்ற கூற்றச்சாட்டு. அவர்களின் கூட்டணியை கலைக்க நாங்கள் முயற்சி செய்யவில்லை. விரைவில் அதுவாகவே கவிழ்ந்துவிடும் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்