இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா போலீஸாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஹைகோர்ட்டின் உத்தரவுப்படி தான் நடக்கிறோம் என போலீஸார் கூறினர். ஹைகோர்ட்டாவது மயிராவது, காவல்துறை ஒரு ஊழல்துறை, டி.ஜி.பி வீட்ல ரெய்டு நடக்குது நீங்கெல்லாம் யூனிபார்ம கலட்டிட்டு போங்க, அங்க புழல் சிறைல முஸ்லீம் பயங்கரவாதிகளுக்கு கலர் டிவி, சகல வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. போலீசுக்கு வெட்கமில்லயா? முஸ்லீம், குறிஸ்தவன் தர மாதிரி நானும் உங்களுக்கு லஞ்சம் தரேன். எங்களுக்கு மேடை போட அனுமதி கொடுங்க என கண்டமேனிக்கு மதக்கலவரத்தை தூண்டும் விதமாக பேசினார்.
தூத்துக்குடியில் அப்பாவி பொதுமக்களை சுட்டுத்தள்ளிய போலீஸார், காவல் துறையையும் நீதிமன்றத்தையும் இவ்வளவு கீழ்தரமாக விமர்சித்த எச்.ராஜாவை கைது செய்யவில்லை. மாறாக அவரை சமாதானம் மட்டுமே செய்துகொண்டிருந்தனர். எஸ்.வி.சேகர், எச்.ராஜா மீதெல்லாம் பாயாத சட்டம் உரிமைக்காக போராடும் மக்களிடம் மட்டுமே உடனடியாக பாயும்.