கார் மோதியதில் குழந்தைகள் பலி ! ஓட்டுநரை அடித்துக் கொன்ற மக்கள்

Webdunia
வியாழன், 27 ஜூன் 2019 (14:41 IST)
பீகார் மாநிலம் ஐக்கிய நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில் உள்ள கும்ரர் என்ற பகுதியில் நேற்று நள்ளிரவு சுமார் 1 மணிக்கு வேகமாக வந்த கார் ஒன்று, சாலையில் ஓரத்தில் படுத்துறங்கிக் கொண்டிருந்த 3 குழந்தைகள் மீது மோதியது. இதில் அக்குழந்தைகள் மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றொரு  குழந்தை படுகாயம் அடைந்தது. 
இதனைத் தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்கள் ஆவேச அடைந்து, காரை ஓட்டி வந்த ஓட்டுநரையும் அவருடன் இருந்த நபர்களையும் பிடித்து, சரமாரியாக அடித்தனர்.
 
இதுபற்றி தகவல் அறிந்த போலீஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கூடியிருந்த கூட்டத்தைக் கலைத்தனர். ஆனால் காரை ஓட்டிவந்த கங்குலி என்பவர் பொதுமக்கள் தாக்கியதில் இறந்துவிட்டார்.
 
அவருடன்  இருந்தவர்களை கைது செய்த போலீஸார், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்