மாப்பிள்ளையை தனியே விட்டு..லெஸ்பியன் துணையுடன் சென்ற புதுப்பெண்!

புதன், 26 ஜூன் 2019 (18:16 IST)
ராஜஸ்தான் மாநிலத்தில் வசிக்கும் இளம்பெண் ஒருவருக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. ஆனால் திருமணமாகி 23 நாட்களிலேயே காணாமல் போனார். இதுகுறித்து போலீஸார் தீவிரமாக விசரித்து வந்தனர். இந்நிலையில் தற்பொழுது அப்பெண்ணை ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தபோலீஸார் கண்டறிந்துள்ளதாக தகவல் வெளியாகிறது.
தன் வீட்டிலிருந்து தீடீரென தன் மனைவி காணாமல் போனதாக கணவன் அளித்த புகாரின் அடிப்படையிலேயே போலீஸார் புதுப்பெண்ணை தேடி வந்தனர்.
 
இதனையடுத்து ஹரியானா மாநிலத்துள்ள மானெசரில் அந்தப் பெண் இருப்பதை கடந்த திங்கட்கிழமை உறுதிசெய்தனர்.இதுகுறித்து அப்பெண்ணிடம் தீவிரமாக போலீஸார் விசாரித்துள்ளனர்.
 
அப்போது, கடந்த 4 வருடங்களாக இப்பெண்ணுக்கும், அவரது தோழிக்கும் இடையே லெஸ்பியன் உறவு இருந்துள்ளதாம். அதனால் திருமணமாகி 23 நாட்கள் கழித்து கடந்த திங்கள் அன்று அப்பேண் வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் கணவரின் புகாரின் அடிப்படையில் இரு பெண்களையும் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
 
இதையடுத்து நீதிமன்றத்தில் புதுப்பெண் கூறியதாவது ; எங்களுக்கான துணையைத் தேர்ந்தெடுக்க முழு சுந்திரம் உள்ளது. எனக்கு இந்த திருமணம் மீது விருப்பமில்லை. எனக்குப் பிடித்தவருடன் வாழவிடுங்கள். என்று கேட்டுள்ளார். மேலும் தனக்கு திருமணம் நடந்தது பெற்றோரின் வற்புறுத்தலால்தான் என்று குற்றம்சாட்டினார்.
 
பின்னர் இரு பெண்களும் சுதந்திரமாக வாழ சட்டத்தில் தடை இல்லை என்பதால் போலீஸார் அவர்களை வழி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்