அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தானாக முன்வந்து உயர்நீதிமன்றம் விசாரணை செய்ய இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இந்த வழக்கில் மேலும் ஒரு சிலர் குற்றவாளிகளாக இருப்பார்கள் என்று கூறப்பட்டு வரும் நிலையில், போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை செய்ய முடிவு செய்துள்ளது.
பெண் வழக்கறிஞர் வரலட்சுமி கடிதத்தின் அடிப்படையில் உயர்நீதிமன்றம் தாமாக விசாரணை செய்ய உள்ளது. மேலும், இந்த விசாரணையில் உள்துறை செயலாளர், டி.ஜி.பி., மாநகர காவல் ஆணையர் மற்றும் பல்கலைக்கழக துணைவேந்தர் விளக்கம் அளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
Edited by Siva