பிரதமர் மோடியுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு..! ஆந்திராவுக்கு வரிச்சலுகை வழங்க கோரிக்கை..!!

Senthil Velan
வியாழன், 4 ஜூலை 2024 (16:18 IST)
ஆந்திரா மாநிலத்திற்கு வரி சலுகை வழங்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் முதல்வர் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தி உள்ளார்.
 
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக மோடி பிரதமராக பதவி ஏற்றார். மத்தியில் பாஜக ஆட்சி அமைக்க சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி முக்கிய பங்கு வகிக்கிறது.
 
இந்நிலையில்  ஆந்திரா முதல்வர் சந்திபாபு நாயுடு,  பிரதமர் மோடியை டெல்லியில் இன்று சந்தித்து பேசினார். ஆந்திரா மாநிலத்திற்கு வரி சலுகை வழங்க வேண்டும் என பிரதமரிடம் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

ALSO READ: எங்கு இருக்கிறது கைலாசா நாடு.? ஜூலை 21-ல் நித்தியானந்தா அறிவிப்பு..!!
 
முன்னதாக, வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயலை சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசினார்.  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, சந்திரபாபு நாயுடு நாளை  சந்தித்து பேச உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்