இந்தியாவிற்கு எதிரான தோல்வியைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா வீரர்கள், பயிற்சியாளர்கள், ஆதரவு ஊழியர்கள், தென் ஆப்பிரிக்கா வீரர்களின் குடும்பத்தினர் என்று அனைவரும் நாடு திரும்பிவிட்டனர். ஆனால், இந்திய அணி வீரர்களால் நாடு திரும்பமுடியவில்லை. கோப்பையை வென்ற மகிழ்ச்சியை கொண்டாடிய நிலையில் பார்படாஸில் பெரில் சூறாவளி புயல் தாக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக விமான சேவை ரத்து செய்யப்பட்டது. மேலும், போக்குவரத்து சேவையும் தடை செய்யப்பட்டது.
ஹோட்டல்களில் பணியாளர்களுக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டது. இது போன்ற பல பிரச்சனைகளை இந்திய அணி வீரர்கள் எதிர்கொண்டனர். இந்த நிலையில் இந்திய அணி வீரர்கள் தனி விமானம் மூலமாக பார்படாஸிலிருந்து அழைத்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. அதன்படி ஏர் இந்தியா விமானமும் பார்படாஸிற்கு வந்துள்ளது. இதையடுத்து இந்திய அணி வீரர்கள் கோப்பையுடன் விமானத்தில் புறப்பட்டுள்ளனர்.