மீண்டும் முதல்வராகிறார் சந்திரசேகரராவ்: நாளை பதவியேற்பு விழா

Webdunia
புதன், 12 டிசம்பர் 2018 (07:56 IST)
தெலுங்கானா மாநிலத்தில் ஆட்சி செய்து வந்த முதல்வர் சந்திரசேகர் ராவ் தலைமையிலான டி.ஆர்.எஸ் கட்சி, ஆட்சியின் பதவிக்காலம் முடியும் முன்னரே தேர்தலை சந்தித்தது. இந்த முடிவு தவறு என ஒருசில தலைவர்கள் கருத்து கூறியபோதிலும் நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் முதல்வரின் முடிவு சரியானதுதான் என்பது நிரூபணமாகியுள்ளது.

தெலுங்கானாவில் நடைபெற்ற தேர்தலில் சந்திரசேகரராவ் அவர்களின் டி.ஆர்.எஸ் கட்சி மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 88 இடங்களை கைப்பற்றியுள்ளது. ஆட்சி அமைக்க 60 தொகுதிகள் இருந்தாலே போதுமானது. காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமைத்தால் வெற்றி பெற்றுவிடலாம் என்ற ஃபார்முலா, தெலுங்கானாவில் எடுபடவில்லை என்பதையே இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றது. இம்மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேச கட்சி

இந்த நிலையில் தெலங்கானா மாநில முதலமைச்சராக டி.ஆர்.எஸ் கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் நாளை பதவியேற்கவுள்ளதாகவும், பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் தொடங்கிவிட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. தனது ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்கள் தங்கு தடையின்றி மீண்டும் தொடரும் என்று முதல்வர் சந்திரசேகரராவ் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்