அரசு அலுவலகங்களில் பி.எஸ்..என்.எல். சேவையைப் பயன்படுத்த மத்திய அரசு உத்தரவு….

Webdunia
புதன், 14 அக்டோபர் 2020 (15:45 IST)
மத்திய அமைச்சகங்கள் அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் இனிமேல் பிஎஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் சேவையைப் பயன்படுத்த வேண்டுமென மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

நாட்டின் மத்திய அரசுக்குச் சொந்தமான பிஎஸ்.என்.எல் நிறுவனம் தனியார் நிறுவங்களின் வருகைக்குப் பின் போதிய லாபமில்லாமல் ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்கவே முடியாமல் திணறி வருவதாகத் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவில், நாட்டிலுள்ள அமைத்து அமைச்சகங்கள், துறை அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் மத்திய சுயாட்சி அமைப்புகள் அனைத்தும் இனிமேல் பிஎஸ்.என்.எல். எம்டிஎன்.எல். சேவையைக் கட்டாயம் பயன்படுத்தவேண்டுமென உத்தரவிட்டுள்ளது.

மேலும், தொலைத்தொடர்பு இணைப்புகள், இண்டர்நெட் பயன்பாடு, பிராண்ட்பேண்ட் சேவை பிராட்பேண்  உள்ளிட்ட அனைத்து சேவைக்கும் பிஎஸ் என்எல் மற்றும்  எம்டிஎன்.எல். சேவையைப் பயன்படுத்த வேண்டுமென அதிகாரிகள் அறிவுறுத்த  அதில் குறிப்பிடப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்