மனைவி தூக்கு மாட்டித் தற்கொலை – கணவன் எடுத்த விபரீத முடிவால் அனாதையான 3 குழந்தைகள்!

Webdunia
புதன், 14 அக்டோபர் 2020 (15:44 IST)
சென்னையில் நெஞ்சு வலியால் அவதிப்பட்ட மனைவி தூக்கு மாட்டித் தற்கொலை செய்துகொண்ட நிலையில் துக்கம் தாங்காமல் கணவனும் அதே முடிவை எடுத்துள்ளார்.

சென்னையக்கு அருகே உள்ள நெற்குன்றம் பகுதியை சேர்ந்த தம்பதிகள் தியாகராஜன் மற்றும் சத்யா. இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆன நிலையில் மூன்று குழந்தைகள் உள்ளன. சத்யா சில ஆண்டுகளாக நெஞ்சு வலி காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளதாக தெரிகிறது. இதனால்  கடந்த 11 ஆம் தேதியன்று, அவர் வீட்டு சமையலறையில் தூக்கு மாட்டித் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்நிலையில் மனைவி இறந்த துக்கம் தாளாமல் நேற்றிரவு அவரது கணவரும் சத்யா இறந்த அதே இடத்தில் தூக்கு மாட்டித் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனால் அவர்களின் மூன்று குழந்தைகளும் இப்போது அனாதையாகியுள்ளனர். இது அவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்