தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட நாள் இன்று!

வியாழன், 17 செப்டம்பர் 2020 (09:50 IST)
தமிழை மத்திய அரசு செம்மொழியாக அறிவித்த நாள் செப்டம்பர் 17 ஆகும்.

செம்மொழி என்பது ஒரு மொழியின் இலக்கியப்பழமை அடிப்படையிலும் பிற பண்புத்தகுதிகளின் அடிப்படையிலும் செய்யப்படும் வகைப்பாடு ஆகும். செம்மொழியாக ஒரு மொழியைத்தெரிவு செய்ய அதன் இலக்கியப் படைப்புகள் வளம் மிகுந்ததாகவும் பழமையானதாகவும், அதன் தோன்றல் ஏனைய மொழிகளில் சாராதிருத்தலும் வேண்டும்.

அந்த அடிப்படையில் 2000 ஆம் ஆண்டுக்கும் மேலாக வளமான இலக்கியங்களையும் தொடர்ச்சியையும் கொண்டுள்ள மொழியாக செழித்து வளர்ந்து வந்த தமிழை செப்டம்பர் 17 ஆம் தேதி  மத்திய அரசு 2004 ஆம் ஆண்டு செம்மொழியாக அறிவித்தது. அதன் பின்னர் அடுத்த ஆண்டு தமிழக உலக செம்மொழி மாநாட்டை கோவையில் நடத்தியது.

இன்றோடு தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டு 16 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்