பதவி விலகிய ஒரு மணி நேரத்துக்குள் மீண்டும் முதல்வராக நிதிஷ்குமார் தேர்வு!

Webdunia
செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (18:37 IST)
பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமாரும் பதவி விலகிய நிலையில் பதவி விலகிய ஒரு மணி நேரத்தில் மீண்டும் முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார். 
 
பீகார் மாநிலத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்த நிதிஷ்குமார் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் நேரில் சென்று வழங்கினார்
 
 இந்த நிலையில் பீகார் மாநிலத்தில் உள்ள எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் கூடிய நிலையில் இடதுசாரிகள் உட்பட 160 எம்எல் நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராக பதவியேற்க ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
இதனை அடுத்து பீகாரில் பதவி விலகிய ஒரு மணி நேரத்திற்குள் மீண்டும் முதல்வராக நிதிஷ்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை அடுத்து அவர் நாளை மீண்டும் முதல்வராக பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்