தொடங்குகிறது பத்ரிநாத், கேதர்நாத் யாத்திரை! – தயாராகும் பக்தர்கள்!

Webdunia
வியாழன், 6 ஏப்ரல் 2023 (11:01 IST)
சார் தாம் யாத்திரை எனப்படும் புனித யாத்திரை இந்த மாதம் தொடங்க உள்ள நிலையில் பக்தர்கள் அதற்காக தயாராகி வருகின்றனர்.

ஆண்டுதோறும் இந்துக்கள் தங்கள் புனித தலங்களான பத்ரிநாத், கேதர்நாத் கோவில்களுக்கு தல யாத்திரை செல்வது வழக்கமாக உள்ளது. நாட்டின் 4 புனித தலங்களான கங்கோத்ரி, யமுனோத்ரி, பத்ரிநாத், கேதர்நாத் ஆகிய கோவில்களுக்கு பக்தர்கள் பாத யாத்திரையாக சென்று வழிபடுகின்றனர்.

ஒரு ஆண்டில் 6 மாதங்கள் மட்டுமே இந்த புனித யாத்திரைக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. பனிக்காலங்களில் புனித தலங்களை பனி மூடிவிடுவதால் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இந்த ஆண்டிற்கான புனித யாத்திரை இந்த மாத இறுதியில் தொடங்க உள்ளது.

அதன்படி கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி தலங்களுக்கு ஏப்ரல் 22ம் தேதி புனித யாத்திரை தொடங்குகிறது. அதை தொடர்ந்து ஏப்ரல் 25ம் தேதி கேதர்நாத் தல யாத்திரையும், ஏப்ரல் 27ம் தேதி பத்ரிநாத் தல யாத்திரையும் தொடங்குகிறது. இந்த தல யாத்திரைகளுக்கு செல்ல ஏராளமான பக்தர்கள் தயாராகி வருகின்றனர்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்