இந்தியாவில் 5000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு! மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா?

வியாழன், 6 ஏப்ரல் 2023 (10:05 IST)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 200க்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில் இந்திய அளவிலும் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களை எண்ணிக்கை அதிகரித்து வந்தது. 
 
கடந்த வாரம் தினமும் 1500 பேர்கள் வரை கொரோனவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இந்த வாரம் 2000, 3000, 4000 என உயர்ந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 5000க்கும் அதிகமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 
 
கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 5535 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் 25,587 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதனை அடுத்து நாடு முழுவதும் கட்டுப்பாட்டுகள் விதிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது .
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்