ஒரு வயது குழந்தை தனக்கு பிறந்ததா என சந்தேகம் அடைந்த தந்தை அந்த குழந்தையை கொலை செய்ததாக வெளியாகி இருக்கும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த சுஜித் என்பவர் தனது மனைவியை அடிக்கடி சந்தேகம் கொண்டதாக தெரிகிறது. அவருக்கு வேறு ஒரு ஆணுக்கு சம்பந்தம் இருப்பதாக அடிக்கடி கூறி சண்டை போட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தனக்கு பிறந்த குழந்தையை கூட அவர் சந்தேகம் அடைந்ததாகவும் அந்த குழந்தைக்கு உண்மையிலேயே அப்பா நான் தானா என அடிக்கடி மனைவியிடம் கேட்டு சண்டை போட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் திடீரென நேற்று குழந்தை மயக்கமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த தாயார் மருத்துவமனையில் சென்று காட்டிய போது குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து கணவர் மீது சந்தேகம் அடைந்த அந்த பெண் காவல்துறையில் புகார் அளித்த நிலையில் காவல்துறையினர் சுஜித்தை கைது செய்து விசாரணை செய்தனர்.
அப்போது தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் இருந்ததாகவும் குழந்தை தனக்கு பிறந்தது இல்லை என்பதால் அந்த குழந்தையை தான் கொலை செய்து விட்டதாகவும் ஒப்புக்கொண்டார். இதனை அடுத்து அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.