பேருந்து நிலையத்தில் பிறந்த குழந்தை! Lifetime ஃப்ரீ டிக்கெட் அளித்த அரசு!

Prasanth Karthick

வியாழன், 20 ஜூன் 2024 (10:55 IST)
தெலுங்கானாவில் பேருந்து நிலையத்தில் பிறந்த குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவசமாக பேருந்தில் பயணிப்பதற்கான பாஸ் வழங்கப்பட்டுள்ளது.



கர்ப்பிணி பெண்களுக்கு எப்போது எங்கே வலி எடுத்து குழந்தை பிறக்கும் என்பதே தெரியாத விஷயமாக உள்ளது. விமானத்தில், ரயிலில், கப்பலில் பயணிக்கும்போது கூட சிலசமயம் பெண்களுக்கு குழந்தை பிறக்கிறது. அவ்வாறாக விமானங்களில் குழந்தை பிறந்தால், அந்த விமானம் நிறுத்தப்படும் நாட்டில் அந்த குழந்தைக்கு இலவச குடியுரிமை வழங்குவதை அவ்வபோது செய்திகளிலும் பார்க்கிறோம்.

அப்படியான ஒரு சம்பவம் சமீபத்தில் தெலுங்கானாவில் நடந்துள்ளது. தெலுங்கானாவின் கரீம்நகர் மாவட்டத்தை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் தன் கணவனுடன் பத்ராசலம் செல்வதர்காக கரீம்நகர் பேருந்து நிலையம் சென்றுள்ளார். அங்கு அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளிக்கப்பட்டது. ஆனால் அதற்குள் பெண்ணுக்கு வலி அதிகமானதால் பேருந்து நிலையத்தில் இருந்து போக்குவரத்து பெண் ஊழியர்கள் சேர்ந்து அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்தனர். இதில் அந்த பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.

ALSO READ: சித்தியை அனுபவிக்க முயன்ற சிறுவன்.. மறுத்ததால் ஆத்திரத்தில் கொலை!

பின்னர் இருவரும் ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தற்போது தாயும், சேயும் நலமாக உள்ள நிலையில், கரீம்நகர் பேருந்து நிலையத்தில் பிறந்த அந்த குழந்தைக்கு தெலுங்கானா மாநில பேருந்துகளில் வாழ்நாள் முழுவதும் இலவசமாக பயணிப்பதற்கான பாஸ் வழங்கப்படும் என தெலுங்கானா போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்