கன்னட நடிகர் தர்ஷன் வீட்டில் இன்னொரு பிணம் மீட்பு.. இன்னொரு கொலையா?

Siva

புதன், 19 ஜூன் 2024 (16:52 IST)
கன்னட நடிகர் தர்ஷன் ஏற்கனவே தனது ரசிகர் ஒருவரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது பண்ணை வீட்டில் இருந்து இன்னொரு பயணம் மீட்கப்பட்டதாகவும் இதுவும் கொலையாக இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கன்னட நடிகர் தர்ஷனுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் காவல்துறையினர் சோதனை செய்த நிலையில் அந்த வீட்டில் தர்ஷனின் மேலாளர் ஸ்ரீதர் என்பவர் இறந்த நிலையில்  இருந்ததாகவும் அவர் அருகே ஒரு எலி மருந்து பாட்டில் கிடைத்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர் எழுதிய தற்கொலை குறிப்பு ஒன்று இருப்பதாகவும் ஆனால் அதில் கையெழுத்து இல்லாமல் மை மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். தற்கொலை செய்து கொண்ட ஸ்ரீதருக்கு 39 வயது ஆகியும் திருமணம் ஆகவில்லை என்பதால் தனிமையில் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஆனால் ஸ்ரீதர் குடும்பத்தினர் அவர் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு கோழை இல்லை என்றும் தர்ஷன் குடும்பத்தினர் தான் கொலை செய்துவிட்டு தற்கொலை போல் ஜோடிக்கப்பட்டு இருப்பதாகவும் இது குறித்து விசாரணை செய்ய வேண்டும் என்றும் புகாரளித்துள்ளனர்.

போலீசார் இதுகுறித்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் ஸ்ரீதர் தற்கொலைக்கும் ஏற்கனவே கொலை செய்யப்பட்ட ரேணுகா சாமி கொலைக்கும் சம்பந்தம் உள்ளதா? இந்த தற்கொலைக்கு தர்ஷனுக்கு தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Edited by Siva
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்