கரையை கடந்தது அசானி புயல்: ஆந்திரா ஒடிஷாவில் கனமழை!

Webdunia
வியாழன், 12 மே 2022 (07:27 IST)
இரண்டு நாட்களாக அச்சுறுத்திக் கொண்டிருந்த அசானி புயல் ஆந்திரா மற்றும் ஒரிசா இடையே கரையை கடந்தது தகவல்கள் வெளியாகியுள்ளன
 
வங்க கடலில் தோன்றிய அசானி புயல் நேற்றிரவு கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்த நிலையில் நேற்று நள்ளிரவில் ஆந்திரா மற்றும் ஒடிசா இடையே கரையை கடந்தது
 
இதனை அடுத்து புயல் விழுந்ததாகவும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதாகவும் புயல் கரையை கடக்கும்போது 65 கிலோ மீட்டர் வேகம் வரை காற்று வீசியதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
மேலும் வடக்கு நோக்கிய காக்கிநாடா மற்றும் துனி கடற்கரை பகுதிகள் வழியாக காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்