புயல் பரிதாபங்கள் - நாகையில் 200 மீ தூரத்துக்கு கடல் நீர் உயர்வு!

புதன், 11 மே 2022 (12:43 IST)
அசானி புயல் எதிரொலியால் கடும் சீற்றம் காரணமாக கடல்நீர் 100 முதல் 200 மீட்டர் வரை கரை உயர்ந்துள்ளது. 

 
இந்தியா முழுவதும் கோடை காலம் நிலவி வரும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் அதிலிருந்து புயலாக உருவான இதற்கு அசாணி என பெயர் வைக்கப்பட்டது.
 
கடந்த 8 ஆம் தேதி புயலாக உருவான அசானி பின்னர் வலுவடைந்து அதி தீவிர புயலாக ஆனது. இந்த புயல் தற்போது ஆந்திரா நோக்கி நகர்ந்து வரும் நிலையில் வலுவிழந்து அதிதீவிர புயலில் இருந்து புயலாக மாறி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
இதனால் வடக்கு ஆந்திர கடலோர மாவட்டங்களில் 105 கிலோ மீட்டர் வரை காற்று வீசக்கூடும் என்றும் கடல் கொந்தளிப்பாக காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா ஆறுகாட்டுத்துறை, மணியன் தீவு, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் ஆகிய மீனவ கிராமங்களில் அசானி புயல் எதிரொலியால் கடும் சீற்றம் காரணமாக கடல்நீர் 100 முதல் 200 மீட்டர் வரை கரை உயர்ந்துள்ளது. நேற்று காலை லேசாக கடல் உள்வாங்கியது. ஆனால் இன்று திடீரென கடல் சீற்றம் காரணமாக கடல் நீர் பெருக்கெடுத்து சுமார் 200 மீட்டர் தூரத்துக்கு கடல் நீர் கரை உயர்ந்தது. இதனால் மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்