ஆந்திரா ரேஷன் கார்டில் இயேசு படம்!? – சர்ச்சைக்குள்ளான போட்டோ

Webdunia
செவ்வாய், 10 டிசம்பர் 2019 (12:37 IST)
ஆந்திர பிரதேசத்தில் குடும்ப அட்டையில் இயேசு கிறிஸ்து உருவம் அச்சிடப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவியுள்ள புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர பிரதேசத்தில் குடும்ப அட்டைகளில் இயேசு கிறிஸ்து உருவம் பொறிக்கப்பட்டுள்ளதாக புகைப்படம் ஒன்று கடந்த சில வாரங்களாக ஆந்திர பகுதிகளில் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது சர்ச்சைக்குள்ளான நிலையில் இது போலியானது என ஆந்திர அரசு மறுத்துள்ளது.

தெலுங்கு தேச கட்சியை சேர்ந்த சிலர் இதுபோன்ற போலியான விஷயங்களை பரப்புவதாகவும், ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்னர் ரேஷன் கார்டுகளில் சாய் பாபா, கிருஷ்ணர் போன்ற உருவங்களையும் அச்சடித்து இதுபோல போலியான புகைப்படங்களை அவர்கள் பகிர்ந்ததாகவும் ஆந்திர அரசு கூறியுள்ளது.

மேலும் இதுபோன்ற சமூக அமைதியை குலைக்கும் வகையில் செயல்படுவதற்கு எதிராக தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்