வெங்காயம் வாங்க வரிசையில் என்றவர் திடீர் மரணம்: அதிர்ச்சியில் உறவினர்கள்!

திங்கள், 9 டிசம்பர் 2019 (22:35 IST)
இந்தியா முழுவதும் வெங்காயத்தின் விலை ரூ.100 முதல் 200 வரை விற்பனையாகிக் கொண்டிருக்கும் நிலையில் ஆந்திர முதல்வரின் சிறப்பான ஏற்பட்டால் ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைத்து உழவர் சந்தைகளிலும் வெங்காயம் ரூபாய் 25க்கு விற்பனையாகி வருகிறது
 
ஒரு கிலோ வெங்காயம் ரூ.25க்கு விற்பனை என்பதால் அந்த வெங்காயத்தை வாங்க ஏழை முதல் பணக்காரர்கள் வரை நீண்ட வரிசையில் காத்திருந்து ஒரு கிலோ வெங்காயத்தை வாங்கி செல்கின்றனர். ஒரு சில இடங்களில் ஒரு கிலோ மீட்டர் முதல் 3 கிலோ மீட்டர் வரை மக்கள் வரிசையில் நின்று வெங்காயத்தை உழவர் சந்தைகள் வாங்கிச் செல்வதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன
 
இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தில் உள்ள கிருஷ்ணா மாவட்டத்தில் கர்னூல் என்ற பகுதியில் உள்ள உழவர் சந்தையில் ரூபாய் 25 வெங்காயத்தை வாங்க சாம்பையா என்பவர் வரிசையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு வந்ததால் மயங்கி விழுந்தார்
 
இதனையடுத்து அவரை காப்பாற்ற அருகில் உள்ளவர்கள் அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ஆனால் அவரது உயிர் வழியிலேயே பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியதும் அவரது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வெங்காயம் வாங்க வரிசையில் நின்று மாரடைப்பால் உயிரிழந்த இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்