தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில் அண்டை மாநிலங்களில் ஒன்றான ஆந்திராவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது
சற்று முன்னர் ஆந்திர மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி கடந்த 24 மணி நேரத்தில் ஆந்திராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,248 என்று அறிவிக்கப்பட்டுள்ளது
அதேபோல் கொரோனாவால் குணமானவர்களின் எண்ணிக்கை 1,715 என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலியானவர்களின் எண்ணிக்கை 15 என்றும் சுகாதார துறை அறிவித்துள்ளது மேலும் ஆந்திராவில் தற்போது கொரோனாவால் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 13,677 என்றும் கொரோனாவால் இருந்து குணமானவர்களின் மொத்த எண்ணிக்கை 19,77,163 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கையில் 13,750என்றும் ஆந்திர மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் கொரோனாவுக்கு எதிராக ஆந்திர அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதால் படிப்படியாக மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது