போட்டியின் மூன்றாம் நாள் ஆண்டர்சன் பேட் செய்ய வந்த போது அவரை தாக்கும் விதமாக பூம்ரா தொடர்ச்சியாக பவுன்சர்களை வீசினார். இதனால் ஆண்டர்சன் கடுப்பாகினார். ஆனால் போட்டி முடிந்த போது பூம்ரா அவரிடம் சென்று தான் வேண்டுமென்றே செய்யவில்லை என மன்னிப்புக் கேட்க சென்ற போது ஆண்டர்சன் அவமானப் படுத்தினார். பின்னர் பூம்ரா ஐந்தாம் நாளில் பேட்டிங் செய்ய வந்த போது இங்கிலாந்து பவுலர்கள் அனைவரும் பவுன்சர் வீசி பூம்ராவை தாக்க முயன்றனர். ஆனால் பூம்ரா அதை சிறப்பாகக் கையாண்டு 36 ரன்கள் சேர்த்தார். அது வெற்றிக்கு மிகப்பெரிய காரணியாக அமைந்தது.
இந்நிலையில் அந்த தருணம் குறித்து பேசியுள்ள ஆண்டர்சன் நான் களத்துக்கு வரும் போது பிட்ச் மெதுவாக இருப்பதாக சொல்லியதால் நான் கொஞ்சம் அலட்சியமாக இருந்தேன். ஆனால் பூம்ரா வீசிய பந்துகள் 90 மைல் வேகத்தில் வந்தது. இதுவரை என் வாழ்நாளில் சந்தித்திராத ஒன்று என்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. அவர் என்னை அவுட் ஆக்க முயலாமல் காயப்படுத்தி உட்கார வைக்க முயற்சி செய்தார் எனக் கூறியுள்ளார்.