வாட்ஸ் ஆப் வதந்தி - கூகுள் என்ஜினியர் அடித்துக் கொலை

Webdunia
ஞாயிறு, 15 ஜூலை 2018 (16:56 IST)
வாட்ஸ் ஆப் வதந்தியால் கூகுளில் வேலை பார்த்து வந்த என்ஜினியர், கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் வாட்ஸ் ஆப் வதந்தியால் பல்வேறு கும்பல்களால் 17 பேர் படுகொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். வதந்தியை நம்பாதீர்கள் என போலீஸாரும் தொடர்ந்து சொல்லி வந்தாலும் இதனை கேட்காமல் பலர் தொடர்ந்து கொல்லப்படுகிறார்கள்.
 
இந்நிலையில் கூகுளில் வேலை பார்த்து வந்த ஐதராபாத்தை சேர்ந்த என்ஜினியர் முகமது அசாம்  தனது உறவினர்களோடு, சுற்றுலா செல்வதற்காக கர்நாடக மாநிலம் பிதார் மாவட்டத்தின் அருகே சென்ற போது, டீ குடிப்பதற்காக தேநீர் கடையில் வண்டியை நிறுத்தியுள்ளார். அப்போது அங்கு இருந்த குழந்தைகளுக்கு அவர்கள் சாக்லெட் கொடுத்துள்ளனர்.
 
இதனைப்பார்த்த அந்த பகுதி மக்கள், அவர்களை குழந்தை கடத்தல் கும்பல் என நினைத்து அவர்களை சூழ்ந்துகொண்டு சரமாரியாக தாக்கினர். இந்த தாக்குதலில் முகமது அசாம் பரிதாபமாக உயிரிழந்தார்.
 
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், அங்கிருந்தவர்களை மக்களிடமிருந்து மீட்டனர். இச்சம்பவம் தொடர்பாக 30-க்கும் அதிகமானோரை காவல்துறை கைது செய்து விசாரணையை மேற்கொண்டு வருகிறது.
 
மரணமடைந்த முகமது அசாமுக்கு 2 குழந்தைகள் உள்ளது. பொதுமக்களின் இந்த கொடூர செயலால் ஒரு குடும்பமே சிதைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்