பிஎஸ்சி படித்த அமித் ஷா நிதி அமைச்சரா? கசியும் தகவல்!

Webdunia
புதன், 29 மே 2019 (16:48 IST)
அருண் ஜெட்லி தனக்கு அமைச்சரவையில் இடம் வேண்டாம் என குறியுள்ளதால் அடுத்த நிதி அமைச்சர் யார் என்ற தகவல் டெல்லி வட்டாரத்தில் இருந்து வெளியாகியுள்ளது. 
 
நாளை மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்கவுள்ள நிலையில், கடந்த 18 மாதங்களாக தனது உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஓய்வெடுக்க மருத்துவர்கள் என்னை அறிவுறுத்தியுள்ளதாகவும் எனக்கு மத்திய அமைச்சர் பதவி வேண்டாம் என அருண் ஜெட்லி தெரிவித்தார். 
 
இதனால் மோடி அமைச்சரவையில் இடம் பெறவுள்ள நிதி அமைச்சர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது இது குறித்த தகவல் சில டெல்லியில் இருந்து வெளியாகியுள்ளது. அதன்படி பியூஷ் கோயல், சுரேஷ் பாபு அல்லது அமித் ஷா ஆகியோரின் பெயர் அடிப்பட்டுள்ளது. 
 
இந்த பட்டியலில் பியூஷ் கோயலுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. இந்த ஆண்டு இடைக்கால பட்ஜெட்டை இவர்தான் தாக்கல் செய்தார். இவர் ஒரு ஆடிட்டரும் கூட என்பதும் குறிப்பிடத்தக்கது. 
அடுத்து சுரேஷ் பிரபுவிற்கும் இந்த வாய்ப்பிருக்கிறதாம். ஏற்கனவே ரயில் அமைச்சராக இருந்த இவரும் ஒரு ஆடிட்டர்தான். நிதி தொடர்பான பல்வேறு கருத்தரங்களில் உலகளவில் பங்கேற்றவர். 
 
ஆனால், இந்த பெயர் பட்டியலில் அமித் ஷாவின் பெயரும் உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிஎஸ்சி மட்டுமே படித்துள்ள அவர் நிதி விஷயங்களை எவ்வாறு கையாளுவார் என்பது தெரியவில்லை. அதேபோல் அமித் ஷா உள்துறை அமைச்சராக்கப்படலாம் என்ற பேச்சும் உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்