மிக விமரிசையாக நடக்க இருக்கும் இந்த பதவியேற்பு விழாவில் பல தேசிய தலைவர்கள் , சர்வதேசத் தலைவர்கள் மற்றும் மாநில முதல்வர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர். தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுக அரசுக்கும் ரஜினி கமல் போன்ற நடிகர்களுக்கும் முதலில் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் நாட்டில் மூன்றாவது பெரியக் கட்சியாகவும் தமிழக எதிர்க்கட்சியாகவும் இருக்கும் திமுகவுக்கு அழைப்புத் தாமதமாகத்தான் விடுக்கப்பட்டது.
இது குறித்து பாஜக தரப்பில் இருந்து இப்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் ’ப்ரோட்டாக்கால் படிதான் அழைப்புகள் விடுக்கப்பட்டன. ஆளும் கட்சியை அழைக்கப்பட்ட பின்னர்தான் எதிர்க்கட்சிகளை அழைப்பது வழக்கம். அதன் படியே திமுகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதில் தாமதம் ஆனது. மற்றபடி உள்நோக்கம் எதுவும் இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.