சமீபத்தில் பெங்களூரில் ராமேஸ்வரம் கஃபே என்ற உணவகத்தில் திடீரென வெடித்த வெடிகுண்டு காரணமாக உணவகம் சில நாட்கள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது 8 நாட்களுக்கு பின்னர் ராமேஸ்வரம் கஃபே திறக்கப்பட்டுள்ளதாகவும் தீவிர சோதனைக்கு பின்னரே வாடிக்கையாளர்கள் உள்ளே அனுமதிக்க பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது
வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்ட ராமேஸ்வரம் கஃபே இன்று காலை மீண்டும் திறக்கப்பட்டதாகவும் வாடிக்கையாளர்கள் வரிசையில் இன்று சோதனைக்கு உள்ள பின்னர் உள்ளே சென்று உணவுகளை வாங்கி செல்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளன
முன்னதாக இந்த உணவகத்தில் வெடிகுண்டு வெடித்த நிலையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மற்றும் உள்ளூர் காவல் துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இந்த உணவகத்தில் குண்டு வைத்த குற்றவாளி தமிழகம் உள்பட தென்னிந்தியாவில் பதுங்கி இருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் மூன்று மாநிலங்களிலும் தீவிரமாக சோதனை செய்யப்பட்டு வருகிறது
ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் நிகழ்ந்த வெடிகுண்டு விபத்தில் 10 பேர் காயம் அடைந்தனர் என்பதும் காயம் அடைந்தவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது