பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவம்: ஜவுளி வியாபாரி கைது

Sinoj

வெள்ளி, 8 மார்ச் 2024 (15:23 IST)
பெங்களூரு குண்டு வெடிப்பு தொடர்பாக ஜவுளி வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
 
அண்மையில்   கர்நாடக மாநிலம் பெங்களூரு உணவகத்தில் குண்டுவெடித்த நிலையில், மீண்டும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
சமீபத்தில் பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே ஹோட்டலில் திடீரென வெடித்த வெடிகுண்டு காரணமாக 10 பேர் காயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டது.
 
இந்த குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து மத்திய புலனாய்வு ஏஜென்சி என்.ஐ.ஏ மற்றும் பெங்களூரு போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில்  இந்த குண்டு வெடிப்புக்கு காரணமான குற்றவாளி தமிழகம் உள்பட 3 மாநிலங்களில் பதுங்கி இருக்கலாம் என்று கூறப்பட்டது.
 
மத்திய உளவுத்துறை அதிகாரிகள் குண்டு வெடித்த இடத்தில் சோதனை செய்ததாகவும் இந்த சம்பவத்திற்கு ஐஎஸ் பயங்கரவாத இயக்கம் காரணமாக இருக்கலாம் எனத் தகவல் வெளியாகிறது.
 
இந்த நிலையில்,  பெங்களூரு உணவகத்தில் குண்டுவெடித்த நிலையில்,  கர்நாடகாவில் பேருந்துகள், வழிபாட்டு தலங்களில் குண்டுவெடிக்கும் என கர்நாடக முதல்வர்  சித்தராமையா, உள்துறை அமைச்சர், காவல்துறை தலைவருக்கு மின்னஞ்சலில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
 
இந்த நிலையில்,   வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் அந்த ஓட்டலில் ரவா இட்லி சாப்பிட்டு விட்டு, தான் கொண்டு வந்த பையை அங்கேயே வைத்துவிட்டு சென்றார். அந்த பையில் இருந்துதான்  வெடிகுண்டுகள் வெடித்துச் சிதறின. இது உறுதியான நிலையில், முகக்கவசம் அணிந்து வந்த நபரின்  புகைப்படத்தை வெளியிட்டு,  இந்த நபரைக் கைது செய்வதற்கு முக்கிய தகவல்களை அளித்தால் ரூ.10 லட்சம் சன்மானம் வழங்குவதாக தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ.,  அறிவித்தது.
 
மேலும், ஷாஹித் கான் என்ற பெயரில் வந்த இமெயில் குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
இந்த நிலையில்,பெங்களூரு ஓட்டல் குண்டுவெடிப்பு தொடர்பாக என்.ஐ.ஏ மற்றும் மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் இண்று ஜவுளி வியாபாரி ஒருவரை கைது செய்துள்ளனர். இவர் பல்லாரி பகுதியில் உள்ள கவுல் பஜாரில் பவுளி வியாபாரம் செய்து வருகிறார். இவரிம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இவர், தடைசெய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பில் செயல்பட்டு வந்துள்ளார் எனவும், குண்டுவெடிப்பு சம்பவத்தில் இவருக்கும் தொடர்பு இருக்கல்லாம் என சந்தேகம் எழுந்துள்ளதால் அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்