பேருந்துகள், வழிபாட்டு தலங்களில் குண்டுவெடிக்கும் - கர்நாடக முதல்வருக்கு மிரட்டல்!

Sinoj

செவ்வாய், 5 மார்ச் 2024 (14:45 IST)
அண்மையில்   கர்நாடக மாநிலம் பெங்களூரு உணவகத்தில் குண்டுவெடித்த நிலையில், மீண்டும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கடந்த வெள்ளிக்கிழமை பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே ஹோட்டலில் திடீரென வெடித்த வெடிகுண்டு காரணமாக 10 பேர் காயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டது.

இந்த குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து மத்திய புலனாய்வு ஏஜென்சி என்.ஐ.ஏ மற்றும் பெங்களூரு போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில்  இந்த குண்டு வெடிப்புக்கு காரணமான குற்றவாளி தமிழகம் உள்பட 3 மாநிலங்களில் பதுங்கி இருக்கலாம் என்று கூறப்பட்டது.
 
மேலும் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் குண்டு வெடித்த இடத்தில் சோதனை செய்ததாகவும் இந்த சம்பவத்திற்கு ஐஎஸ் பயங்கரவாத இயக்கம் காரணமாக இருக்கலாம் எனத் தகவல் வெளியாகிறது.
 
இந்த நிலையில், அண்மையில் பெங்களூரு உணவகத்தில் குண்டுவெடித்த நிலையில், மீண்டும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கர்நாடகாவில் பேருந்துகள், வழிபாட்டு தலங்களில் குண்டுவெடிக்கும் என கர்நாடக முதல்வர்  சித்தராமையா, உள்துறை அமைச்சர், காவல்துறை தலைவருக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
 
ஷாஹித் கான் என்ற பெயரில் வந்த இமெயில் குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்